court

img

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

மதுரை,நவம்பர்.14- நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து மிகவும் மோசமான முறையில் நடிகை கஸ்தூரி அவதூறாகப் பேசியிருந்தார். இதனை எதிர்த்து பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
மேலும் நடிகை கஸ்தூரி மீது பல இடங்களில் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. தலைமறைவான கஸ்தூரியைத் தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி மனு செய்திருந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கஸ்தூரியின் பேச்சைக் கடுமையாகச் சாடியதோடு முன்ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.