சென்னை,செப்.13- சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமி செவ்வா யன்று (செப்.13) பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஷ்வர்நாத் பண்டாரி செப்.12 அன்று பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியான எம்.துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நிய மித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டி ருந்தது. அதன்படி, உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.