court

img

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம்!

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை படிப்படியாக ஒழிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. 
நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தும் நோக்கில் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது என தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையாக சாடியுள்ளார்.