court

img

கட்டாய பாலுறவுக்கு உள்ளான பெண்கள் கருவைக் கலைக்க உரிமை உண்டு!

புதுதில்லி, செப்.29- திருமணமான பெண்ணைப் போலவே திருமணமாகாத பெண்ணு க்கும் கருக்கலைப்பு செய்து கொள் வதற்கு உரிமை உண்டு என உச்ச நீதி மன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கி யுள்ளது. “மருத்துவக் கருவுறுதல் சட்டத்தின் (Medical Termination of Pregnancy - MTP) கீழ், பாலியல் வல்லுறவு,  கட்டாய பாலுறவு போன்ற பிரச்சனை களில், திருமணமான மற்றும் திருமண மாகாத பெண்களுக்கு இடையே வேறு பாடு  காண்பது செயற்கையானது; அரசி யலமைப்பு ரீதியாக அது நீடிக்க முடி யாதது” என்று உச்சநீதிமன்றம் கூறி யுள்ளது.

மேலும், தங்கள் கணவர்களால் கட்டா யப் பாலுறவில் இருந்து கருத்தரித்த மனைவிகளும், மருத்துவக் கரு வுறுதல் சட்ட விதிகளின் விதி 3B(a)  இல் குறிப்பிடப்பட்டுள்ள ‘பாலியல் வல் லுறவு அல்லது கட்டாயப் பாலுறவு அல் லது பாலுறவில் இருந்து தப்பியவர்கள்’ வரம்பிற்குள் வருவார்கள் என்று கூறி யிருக்கும் உச்சநீதிமன்றம், இதன்படி “தனித்து வாழும் அல்லது திருமண மாகாத பெண்களுக்கும் மருத்துவக் கரு வுறுதல் சட்டம் (Medical Termination  of Pregnancy - MTP) மற்றும் விதி முறைகளின் கீழ் கருக்கலைப்பு செய்ய 24 வாரங்கள் வரை உரிமை உண்டு” என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. கருவைக் கலைக்க சட்ட ரீதியாக விவாகரத்து பெற்றவராகவோ அல்லது விதவையாகவோ இருந்தால் மட்டுமே தன்னிச்சையாக முடிவு எடுக்க முடி யும் என்ற விதியே இதுவரை பின்பற்றப் பட்டு வந்தது. அதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உடைத்துள்ளது. “திருமண நிலையைக் காரணம் காட்டி, தேவையற்ற கருவைக் கலை க்கும் உரிமையை ஒரு பெண்ணிட மிருந்து பறிப்பது அரசியல் சாசனத் திற்கு எதிரானது” என்று நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்சநீதி மன்ற அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.

அதுமட்டுமன்றி, “திருமணத்திற்கு பிறகு மனைவியின் அனுமதியின்றி, கண வன்மார்களால் ஏற்படும் பாலியல் வன் கொடுமையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் கருக்கலைப்புக்கான விதிகளின் கீழ் (Marital Rape) என  எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்” என்றும் முதன்முறையாக உச்ச நீதிமன் றம் வழிகாட்டுதலை அளித்துள்ளது. மணிப்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் (25) திருமணம் செய்துகொள்ளா மலேயே தனது காதலருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இதில் அவர் கருவுற்றுள்ளார். ஆனால், அவரது காத லர் திடீரென திருமணத்திற்கு மறுத்துள் ளார். இதையடுத்து, திருமணத்துக்கு முன்பே கருவுற்றதாலும் காதலன் கை விட்டதாலும், அந்தப் பெண் கருவை கலைக்க முடிவு செய்தார். கரு 23  வாரங்களைக் கடந்துவிட்டதால், அத னைக் கலைப்பதற்கு அனுமதி கோரி, தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

“எனக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் என்னால் இக்குழந்தையை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் இதனால் கருவை கலைக்க அனு மதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், 20 வாரங்களை கடந்து  விட்டதால், இளம்பெண் கருவை கலைக் கக்கூடாது என்றும் குழந்தையைப் பெற்று அரசிடம் ஒப்படைக்கலாம் என் றும் தில்லி உயர்நீதிமன்றம் கூறிவிட்டது. எனினும், பாதிக்கப்பட்ட பெண், தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறை யீடு செய்தார். அவரது மனு நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையில், நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, ஆகஸ்ட் மாதம் விசார ணைக்கு வந்தது. அப்போதே, “ஆய்வு க்கு உட்பட்டு கருவைக் கலைக்கலாம்” என்று உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை வழங்கியது. “கருக்கலைப்பு சட்டத்தில் 2021- ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்த த்தின் படி, 3-வது பிரிவில் கணவன் என்ப தற்கு பதில் இணையர் (பார்ட்னர்) என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால் திருமணம் ஆகாத பெண்களுக்கும் இந்த சட்டம்  பொருந் தும் என்பதே ஆகும். எனவே,  மனுதா ரருக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவர் களின் ஆய்வுக்கு உட்பட்டு கருவை கலைக்க அனுமதி அளிக்கப்படுகிறது” என்று அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில், இந்த வழக் கில் வியாழனன்று மேலும் விரிவான உத்தரவை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு வழங்கி யுள்ளது. அந்த தீர்ப்பிலேயே மேற்கண்ட விளக்கங்களை உச்சநீதிமன்றம் வழங்கியுள் ளது.

பெண்தான் முடிவெடுக்க வேண்டும்

திருமணமான பெண்  களும் பாலியல் வன்கொடுமை அல்லது பலாத்காரத்தில் இருந்து தப்பியவர்களில் ஒரு பகுதியாக இருக்கலாம். பெண்ணின் சம்மதமற்ற செய லால் ஒரு பெண் கருவுறலாம். வல்லுறவு என்ற வார்த்தை யின் சாதாரண அர்த்தம், ஒரு வருடன் சம்மதம் இல்லாமல் அல்லது அவர்களின் விருப் பத்திற்கு மாறாக உடலுறவு கொள்வதாகும். அதேபோல மணவாழ்விலும், ஒரு பெண் தன் கணவனால், அப்பெண் ணின் சம்மதமற்ற உடலுறவின் விளைவாக கருவுறலாம். பல்வேறு பொருளாதார, கலாச்சார அல்லது சமூக கார ணிகள் இதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. பாலியல் மற்றும் பாலின  அடிப்படையிலான வன்முறைக்கு அந்நியர்கள் மட்டுமே அல்  லது பிரத்யேகமாக பொறுப்பு என்ற தவறான கருத்து மிக வும் வருந்தத்தக்க ஒன்றாகும். பாலின பாகுபாடு மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை குடும்பத்தின் சூழலில் அதன் அனைத்து வடிவங்களிலும் நீண்ட காலமாக பெண்களின் வாழ்க்கை அனுபவங்களின் ஒரு பகுதியாக உள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 375-ஆவது பிரிவின் விதிவிலக்கு 2-ஐயும் நாங்கள் சுருக்கமாகத் தொட்டுள்ளோம். விதிவிலக்கு 2 முதல் 375-ஆவது பிரிவு வரை இருந்தபோதிலும்,  விதி 3B(a) இல் உள்ள ‘பாலி யல் வன்கொடுமை’ அல்லது  ‘வல்லுறவு’ என்ற வார்த்தை யின் பொருள் கணவரின் பாலி யல் செயலையும்- அதாவது அவரது மனைவி மீதான பாலி யல் வன்கொடுமை அல்லது  வல்லுறவையும்  உள்ளடக்கி யது.

எனவே, ‘வல்லுறவு’ என்ப தன் பொருள், மருத்துவக் கரு வுறுதல் சட்டம் மற்றும் அதன்  கீழ் உருவாக்கப்பட்ட பிற விதி கள் மற்றும் ஒழுங்குமுறை களின் நோக்கத்தில், திரு மணத்தின் மூலமான வல்லுற வையும் உள்ளடக்கியதாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். அதற்கு மாறான வேறெந்த விளக் கமும் ஒரு பெண்ணை குழந் தையை பெற்றெடுக்கவும், வளர்க்கவும் கட்டாயப்படுத் தும் விளைவையே கொண்டி ருக்கும். அது, அப்பெண் ணுக்கு மன மற்றும் உடல் ரீதி யான தீங்கை விளைவிக்கும். இறுதியில் ஒவ்வொரு பெண்ணும் அவரது  சூழ் நிலைக்கு ஏற்ப முடிவெடுப்பது தனிச்சிறப்பாகும். பெண் தான் கருவை சுமக்கிறார். கரு வேண்டுமா வேண்டாமா என்  பதை பெண்தான் முடிவெடுக்க  வேண்டும். இந்த உரிமை மறுக்  கப்படுவது அவரது கண்ணி யத்தை அவமதிக்கும் செயலா கும். தேவையற்ற கருவைக் கலைக்கும் ஒரு பெண்ணின் உரிமையை திருமண நிலை யை முன்வைத்து பறிக்க முடி யாது. மருத்துவ கருவுறுதல் சட்டம் மற்றும் விதிகளின் படி 24 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்கும் உரிமை திருமணம் ஆகாத பெண்  களுக்கும் உண்டு. சட்டப்பூர்வ மாக மற்றும் பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதி உடைய வர்கள்தான். தேவையற்ற கரு வைக் கலைக்கும் உரிமை திருமணமான பெண்களுக்கு மட்டுமே உள்ளது என சுருக்கு வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இவ்வாறு டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான உச்சநீதி மன்ற அமர்வில் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

;