court

img

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து - ஆகஸ்ட் 2 முதல் விசாரணை

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்பு பிரிவு 370-ஐ  தனது  பெரும்பான்மை அதிகாரத்தை வைத்து  அனைவரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி மோடி தலைமையிலான பாஜக அரசு நீக்கியது.
ஜம்மு-காஷ்மீரை இரண்டாக சிதைத்து யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு குறைந்த பட்ச சுயாட்சி அதிகாரம் கூட இல்லாமல் செய்து விட்டு, அங்கு மக்களையும் கொடுங்கரங்களால் நசுக்கி வருகிறது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணை இன்று நடத்தப்பட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசாரணை ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.