court

img

ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை ஒத்திவைப்பு...

புதுதில்லி:
முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடைகோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட் டது. மூன்றாண்டுகளைக் கடந்து  ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், மருத்துவ நிபுணர்கள் இல்லாத ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பாக ஆஜராகி விளக்கம் அளிக்கமுடியாது. ஆணையம் செயல்பட தடைவிதிக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவைகடந்த ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம் ஆணையத்துக்கு இடைக்காலத்தடை விதித்தது. இந்த தடையை நீக்கக்கோரி தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் செய்து தடையை நீக்கியது.இதனையடுத்து டிசம்பர் 9 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் இருதரப்பினரும் வாதாடினர். இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான அப்துல்நசீர் வேறு ஒரு வழக்கை விசாரித்ததால் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

;