court

img

சேர்ந்து வாழ்ந்தோருக்கு பிறந்த குழந்தைக்கு அனைத்து உரிமைகளும் உண்டு....

கொச்சி:
திருமணமான உறவில் பிறந்த குழந்தைக்கு உள்ள அதே உரிமைகள் லிவிங்டுகெதர் என்கிற திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தோருக்கு பிறந்த குழந்தைக்கும் உண்டு என்று கேரள உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.

ஒரு பெண்ணுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த ஆண் அவளை கைவிட்டபோது அவர்களது குழந்தை, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்னர் மற்றொரு தம்பதியினர் அந்த குழந்தையை த்தெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளை ரத்து செய்த நீதிமன்றம், அந்த குழந்தைக்கான உரிமை குறித்த இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ முகமது முஷ்டாக் மற்றும் கவுசர் எடப்பகத்ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சின் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த  தீர்ப்புடன்,  சமுதாயத்தில் இதுபோன்ற தனிமைப்படுத்தப்பட்ட வர்களைப் பாதுகாக்க சிறப்புத் திட்டத்தை வகுக்கவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

2018 ஆம் ஆண்டில், பெருவெள்ளத்தின் போது ஒன்றாக வாழ முடிவு செய்த ஒரு இளம்பெண் மற்றும் ஒரு இளைஞனுக்கு ஒரு குழந்தைபிறந்தது. குடும்பத்தினர் திருமணத்திற்கு உடன்படவில்லை. பிரசவம் ஒரு அரசு மருத்துவமனையில் நடந்தது. குழந்தையின் தந்தை பெயரும் மருத்துவமனை பதிவுகளில் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த இளைஞன் உறவில் இருந்து விலகிவிட்டான். திரைப்படத்தில்நடிக்க தான் கர்நாடகா செல்வதாக கூறி பிரிந்துசென்றுள்ளார். குழந்தைகள் நலக்குழுவிடம் அந்த குழந்தையை அதன் தாயார் ஒப்படைத்தார். 

பின்னர் அந்த குழந்தையை, முறையான நடவடிக்கைகளை பின்பற்றி குடும்ப நீதிமன்றத்தின் அனுமதியுடன் மற்றொரு தம்பதியினர் தத்தெடுத்தனர். தத்தெடுப்பு செயல்முறை சட்டப்பூர்வமானது என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில்தெரிவித்துள்ளது. திரும்பி வந்த தந்தை குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க ஒரு ஆட்கொணர்வு (ஹேபியஸ் கார்பஸ்) மனுவைதாக்கல் செய்தார். இந்நிலையில், குழந்தைகள் நலக் குழுவின் நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய நீதிமன்றம் முடிவு செய்தது.

பாலியல் வல்லுறவு வழக்குகள் மற்றும் பாலியல் குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பிறந்த குழந்தைகளின் தந்தையை அடையாளம் காண வேண்டும் என்று சட்டம் விதிக்கிறது. எனவே குழந்தையை தந்தை மற்றும் தாயிடம் திருப்பித் தருமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.  தாயார் சுய விருப்பத்தில் ஒப்படைத்த குழந்தை என்பதால், தந்தையின் விருப்பத்தை அறிந்துகொள்ள வேண்டிய பொறுப்பு குழந்தைகள் நலக்குழுவுக்கு உள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்தது. எனவே, குழந்தையை தந்தை, தாயிடம் திரும்பஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  திருமண உறவில் பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய உரிமை இதுவெனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தாய்மையின் மகிமை விலைமதிப்பற்றது என்றும், தெய்வங்களை வழிபடும் இந்த நாட்டில் தாய்மையின் மகிமை அங்கீகரிக்கப் பட வேண்டும் என்றும் மனுஸ்மிருதியை நீதிமன்றம் மேற்கோளிட்டுள்ளது. தனித்து வாழும்தாய்மார்களைப் பாதுகாக்க வேண்டிய கடமைஅரசாங்கத்திற்கு உள்ளது. சமூக காரணி களால் தாய் தனது குழந்தையை கைவிட வேண்டியிருக்கிறது என்றும் தாய்மையின் மதிப்பு மற்றும் கவுரவத்தை கவனிக்காமல் விட்டுவிட முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
 

;