cinema

img

ரூ. 5 கோடிக்கு போலி ரசீது கைப்பற்றப்பட்டதா? நான் மலிவானவள் இல்லை என்பது எனக்கே இப்போதுதான் தெரிகிறது.... வருமான வரித்துறையை கிண்டலடித்த நடிகை டாப்சி....

மும்பை:
நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்யப்பிற்கு சொந்தமாக மும்பை மற்றும் புனேயில் இருக்கும்வீடு, அலுவலகங்கள் என 30-க்கும்மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர், கடந்த புதன்கிழமையன்று சோதனை நடத்தினர்.

சாதி, மதம், இன அடிப்படையில், பாஜக மேற்கொண்டுவரும் பிளவுவாத அரசியலுக்கு எதிராக டாப்சியும், அனுராக்கும் தொடர்ந்து குரல்கொடுத்து வந்த நிலையில், இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், ரூ. 650 கோடி அளவிற்கான முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, சுமார் 300 முதல் 350 கோடி வரையிலான முறைகேட்டுக்கு ஆதாரங்களையும் கைப் பற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக டாப்சிக்கு சொந்தமான இடத்திலிருந்து ரூ. 5 கோடிக்கான போலி பில்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் அவர்கள்கூறினர்.இந்நிலையில், தன்னிடமிருந்து ரூ.5 கோடிக்கான போலி ரசீதை கைப்பற்றியுள்ளதாக வருமான வரித்துறை கூறியிருப்பதை சொல்லி,நடிகை டாப்சி சிரித்துள்ளார். பரவாயில்லை.. என்னை இந்த அளவிற்கு பெரிய ஆளாக்குவார்கள் என்றுதெரியவில்லை... என்று பொருள் படும் வகையில், “இனி நான் ஒன்றும் மலிவானவள் இல்லை” என்று கூறிவருமான வரித்துறையைக் கிண்டலடித்துள்ளார்.இதுதொடர்பாக, டாப்சி தனதுடுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

“3 நாட்கள், 3 விஷயங்களைத் தேடி தீவிரமான சோதனை நடந் தது. முதலாவது, பாரிஸ் நகரில் எனக்குச் சொந்தமாக ஒரு பங்களா இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன் சாவியைத் தேடினார்கள். ஏனென்றால் கோடை விடுமுறை நாட்கள் வரப்போகின்றன.இரண்டாவது, என் பெயரில் இருப்பதாகச் சொல்லப்படும் 5 கோடிரூபாய் மதிப்பிலான ரசீது. அதை எடுத்து ஃப்ரேம் செய்து மாட்ட எதிர்காலத்தில் எனக்கு அதைத் தரப் போகிறார்கள். ஏனென்றால் அந்தப் பணம் வேண்டாம் என்று நான் ஏற்கெனவே மறுத்திருந்தேன்.

மூன்றாவது, நமது மத்திய நிதியமைச்சர் சொன்னதுபோல, 2013ஆம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனையைப் பற்றிய என் நினைவுகளைத் தேடினார்கள்...இவ்வாறு குறிப்பிட்டுள்ள டாப்சி, ‘பின்குறிப்பு’ என்று சொல்லி, “இனிநான் மலிவானவள் இல்லை” என்றுவருமான வரித்துறையை கிண்டலடித்துள்ளார்.

;