cinema

img

நடிகை வஹீதா ரஹ்மானுக்கு 'தாதாசாகேப் பால்கே' விருது அறிவிப்பு!

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர்' விருதை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
வஹீதா ரஹ்மான் 1938ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர். இவர் 1956-ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான அலிபாபாவும் 40 திருடர்களும்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தியில் பியாசா, காகஸ் கி பூல், செளதாவி கா சந்த், பிவி அவுர் குலாம், கைடு, காமோஷி போன்ற குறிப்பிடத்தக்கப் படங்களில் வஹீதா நடித்துள்ளார். கடந்த 1972-ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கியது. 2011-இல் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வஹீதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர்' விருதை ஒன்றிய அரசு அறிவித்துள்ளதாக ஒன்றிய தகவல் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.