இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்து, இளையராஜா-யுவன்ஷங்கர் ராஜா இசைக்கூட்டணி இசையமைத்துள்ள மாமனிதன் படத்தின் டிரைலர் வெளியானது.
தர்மதுரை பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் சீனு ராமசாமி-விஜய சேதுபதி இணைந்துள்ள மாமனிதன் படத்தை யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் நிறுவனம் தயாரித்துள்ளது. இளையராஜா-யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.
ஏற்கனவே இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது. மாமனிதன் திரைப்படம் மே 20-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.