cinema

img

விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி - சோழ. நாகராஜன்

பிரபல நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தைத் தயாரித்து, இசையமைத்து, நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். அவரது ஜோடியாக காவ்யா தாப்பர் நடித்துவருகிறார். மலேசியாவின் லங்காவி தீவில் ஒரு பாடல் காட்சியின்போது ஜெட் ஸ்கை எனப்படும் கடலுக்குள் செல்லும் பைக்கில் அவர் நாயகியுடன் செல்வதுபோலப் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர விபத்தில் விஜய்  ஆண்டனியின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவரைச் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சையளிக்கவும் முடிவு செய்துள்ளதாகப் படக்குழுவினர் தெரி வித்தனர்.

;