தமிழ், தெலுங்கு, இயதி என பலமொழித் திரைப்படங்களையும் தயாரித்தவர் டி.ராமாராவ். ஒரு தேர்ந்த தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் முத்திரை பதித்தவர். இவர், தமிழில் விஜய் நடித்த யூத், விக்ரம் நடித்த தில், ஜெயம் ரவி, அருள் நடித்த உனக்கும் எனக்கும், விஷால் நடித்த மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களைத் தயாரித்தார். இந்தியில் தர்மேந்திரா, அமிதாப் பச்சன் போன்றவர்களின் வெற்றிப்படங்களை இயக்கிய ராமாராவ் ரஜினி நடித்த அந்தா கானூன் படத்தையும் இயக்கினார். சென்னை தி.நகரில் வசித்துவந்த டி.ராமாராவ் உடல் நலமின்மை காரணமாகவும் வயது மூப்பு காரணமாகவும் காலமானார். திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.