cinema

img

பொன்னியின் செல்வன் திரைக்கு வரும் நாள்

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை லைக்கா நிறுவனத்திற்காக மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்திருக்கிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இதன் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைகிற நிலையில் உள்ளதாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இதன் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 அன்று பொன்னியின் செல்வன் பாகம் - 1 திரைக்கு வரவிருக்கிறதாம்.