ஜடா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பலரையும் கவர்ந்தவர் இயக்குநர் குமரன். இவர் புதிதாக ஒரு ஆல்பம் உருவாக்கியுள்ளார். பறை குறித்த அந்த ஆல்பத்தில் முழுவதும் பறை இசை முழங்கப்போகிறதாம். விரைவில் வெளியாகவுள்ள இந்தப் பறை ஆல்பம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.