cinema

img

ஆரூரான் என்ற ஆரூர்தாஸ் சொன்னது...

‘‘ஒரே நேரத்தில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதிய ஒரே வசனகர்த்தா நானாகத்தான் இருப்பேன்...’’ - என்று ஒருமுறை கூறினார் அண்மையில் மறைந்த பிரபல  தமிழ்த் திரைப்பட வசன கர்த்தா ஆரூர்தாஸ். ஆரூ ரான் என்ற பெயரிலும் அவர் எழுதுவதுண்டு. உடல்நலக் குறைவால் தனது 91-ஆவது வயதில் மறைந்த ஆரூர்தாஸ் 1955-ஆம் ஆண்டு முதல் 2014 வரை திரைத்துறையில் பணியாற்றியுள்ளார்.  அது 1962-ஆம் ஆண்டு. எம்ஜிஆர் நடிப்பில் உருவான ‘தாயைக் காத்த தனயன்’ பட மும், சிவாஜி நடிப்பில் உரு வான ‘படித்தால் மட்டும் போதுமா’ படமும் வெளியாகி, சென்னையில் அந்த இரண்டு படங்களும் 100 நாட்களைத் தாண்டி ஓடிக்கொண்டிருந் தன. ஆரூர்தாசிடம் எம்ஜிஆர், ‘‘தாயைக் காத்த தனயன் வெற்றிக்காக உனக்கு என்ன பரிசு வேண்டும்?’’ - என்று கேட்டார். தனக்கு அவரின் அன்பே போதுமானது என்று ஆரூர்தாஸ் கூறிவிட்டார்.

அதே நாள் பிற்பகல் அடுத்த சிவாஜி படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்குப் போன ஆரூர்தாசி டம் சிவாஜி, ‘‘படித்தால் மட்டும் போதுமா பட வெற்றிக் காக என்ன பரிசு வேண்டும்?’’ - என்று கேட்டிருக்கிறார். ஆரூர்தாசுக்கு ஒரே வியப்பு. இருவரும் எப்படி ஒரே மாதிரி சிந்தித்திருக்கிறார்கள் தன் விசயத்தில் என்று எண்ணிக்கொண்டார். எம்ஜி ஆருக்குச் சொன்ன அதே பதிலையே சிவாஜியிடமும் கூறியிருக்கிறார் ஆரூரார்.  இருந்தபோதிலும் எம்ஜி ஆர் தங்கப்பூண்போட்ட வெள்ளித்தட்டொன்றையும், சிவாஜி உள்ளங்கை அளவி லான தங்கப் பதக்கம் ஒன்றை யும் அவருக்குப் பரிசளித்தார் களாம். இதனை ஒரு நேர்கா ணலில் அவரே சொல்லியிருக் கிறார். தமிழில் ஆயிரம் படங்களுக்கும் அதிகமாக உயிரோட்டமான வசனங் களை எழுதிய மறைந்த ஆரூர் தாஸ் பேசும்படத்தின் தர முயர்த்தியதில் முக்கியப் பங்களிப்பு செய்தவராவார். 

;