cinema

img

நடிகர் தவசிக்கு சிவகார்த்திகேயன், சூரி நிதியுதவி...

சென்னை:
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசிக்கு, சிவகார்த்திகேயன் நிதியுதவி செய்துள்ளார்.நடிகர் சிவகார்த்தி கேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் தந்தையாக முறுக்குமீசையுடன் கம்பீரமாக கருப்பன்சாமி அருள்வாக்குகூறும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகர் தவசி. இதுமட்டுமல்லாமல் ரஜினிமுருகன், சுந்தரபாண்டியன், மெர்சல், அண்ணாத்த உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப் பட்ட அவர் உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். மருத்துவ செலவுக்காக அவதியுற்ற அவர் சக நடிகர்களின் உதவி கேட்டு கண்ணீர் மல்க பேசிய வீடியோ வெளியானது. அவரது நிலையை அறிந்து வருத்தப்பட்ட பலரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். அவரின் நிலையை அறிந்த, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான சரவணன், அவருக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார்.  இந்நிலையில் அவருக்கு நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோர் நிதியுதவி செய்துள்ளனர்.நடிகர் தவசிக்கு முதல்கட்டமாக ரூ.20,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், தவசி மற்றும் அவரது உதவியாளருக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படும் என் றும் நடிகர் சூரி தெரிவித்தார். அவருக்கு தேவையான அடுத்தடுத்த உதவிகளை செய்யவும் தயாராக இருப்பதாக கூறினார். அதேபோல் நடிகர் தவசிக்கு சிவகார்த்திகேயன் சார்பில் ரூ.25,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அவரது ரசிகர் மன்ற தலைவர் மோகன், தவசியை சந்தித்து நிதியுதவியை வழங்கினார்.