cinema

img

மூன்றாமிடத்தில் ஷியாம் சிங்கா ராய்

உலகளாவிய சிறந்த பத்து படங்களின் பட்டியலை நெட் ஃபிலிக்ஸ் ஒடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இடம் பிடித்துள்ள ஒரே இந்தியத் திரைப்படம் ஷியாம் சிங்கா ராய். ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபஸ்தின், முரளி ஷர்மா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த தெலுங்குப் படம் கடந்த கிறிஸ்துமஸ் அன்று திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்தப் படத்தைக் குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி எழுதி வருகிறார்கள். ரசிகர்களிடையே ஒரு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிற இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள முற்போக்குக் கருத்துக்கள் அடங்கிய வசனங்கள் வைரலாகி வருகின்றன. தமிழிலும் இந்தப் படம் டப் செய்யப்பட்டுள்ளது. நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ள டாப் 10 பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது போலந்து நாட்டின் ஹவ் ஐ ஃபெல் வித் எ கேங்ஸ்டர் எனும் படமாகும். 

;