‘பிசாசு 2’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'பிசாசு'.
இதயடுத்து நடிகை ஆண்ட்ரியாவை நாயகியாக வைத்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி வந்த நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி நிறைவடைந்திருந்தது.
இந்நிலையில், 'பிசாசு 2' வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடிகை பூர்ணா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.