ஒருவர் மட்டும் பணம் செலுத்திவிட்டு, அந்தப் பாஸ்வேர்டைப் பலருக்கும் பகிர்ந்துவிடுகிற வழக்கம் ஓடிடி தளத்தில் சகஜம். அதனால், வரும்படி பாதிக்கப்படுகிற நிறுவனங்கள் விழி பிதுங்கிக்கொண்டி ருக்கை யில் நெட் ஃபிலிக்ஸ் நிறுவனம் ஒரே வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்குள் நெட் ஃபிலிக்ஸ் கணக்கைப் பகிர்ந்துகொள்வதை நாங்கள் எளிதாக்கி யுள்ளோம். அதே நேரத்தில் குடும்பத்திற்கு வெளியே கணக்கைப் பகிர்வதால் தொடர்கள் மற்றும் படங்களில் முதலீடு செய்வோரை அது பாதிக்கிறது. எனவே, அதற்கு ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்போகிறோம் என்று கூறியிருக்கிறது. பிறருக்குப் பகிருவோர் இனி கூடுதல் கட்டணம் செலுத்துகிற வகையில் தொழில்நுட்பம் வரப்போகிறதாம்.