cinema

img

டிஒய்எப்ஐ பாதுகாப்புடன் ‘நீயம் தனல்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது....

பாலக்காடு:
சங்-பரிவார் தாக்குதல் காரணமாக நிறுத்தப்பட்ட ‘நீயம் தனல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கோங்ஙாடு திரிபலமுண்டாவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊழியர் களின் பாதுகாப்பில் ஞாயிறன்று (ஏப்.12) மீண்டும் தொடங்கியது.

முன்னதாக, கடம்வழிப்புரத்தில் உள்ள வாயில்யாம்குந்நு கோயில் வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த விடாமல் சங்-பரிவார் அமைப்பினர் தடையாக இருந்தனர். படப்பிடிப்புக் கருவிகள் சூறையாடப்பட்டன. இரு மதங்களைச் சார்ந்தவர்களுக்கு இடையிலான காதலை இப்படத் தில் சித்தரிப்பதே ஆர்எஸ்எஸ் எதிர்ப்புக்கு காரணமாக கூறப்பட் டது. அதோடு சிவப்புக் கொடியை காட்டுவதைக் கண்டும் நடுங்கிய ஆர்எஸ்எஸ் கும்பல், திட்டமிட்ட தாக்குதலைத் தொடங்கியது. இதில், படத்தில் நடிக்க வந்த எட்டு வயது சிறுமி உட்பட பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய 5 பேரை ஸ்ரீகிருஷ்ணபுரம் காவல்துறையினர் சனிக்கிழமையன்று கைது செய்தனர்.

‘நீயம் தனல்’ திரைப்படத்தில் பிஜூ மேனன், வினீத் ஸ்ரீனிவாசன்ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், ஆஷிஷ், சல் மான், சினு ஆகியோர் படத்தை இயக்குகின்றனர். சங்-பரிவாரின் தாக்குதலுக்குப் பிறகு, ஞாயிறன்று காலை முதல்மாலை வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரின் பாதுகாப்புடன் படப்பிடிப்பு தொடர்ந்தது. டிஒய்எப்ஐ தலைவர்கள் கே.கே. சுகுமாரன், ஷியாம பிரசாத், சசி தலைமையிலான ஊழியர்கள் பாதுகாப்பு அளித்தனர்.

;