ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் ஃபர்ஹானா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மேலும் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோள், ஐஸ்வர்யா தத்தா போன்றோரும் நடித்திருக்கிறார்கள். பண்ணையாரும் பத்மினியும், மான்ஸ்டர் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கோகுல் பினாய் இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவைச் செய்திருக்கிறார். இசை ஜஸ்டின். இயக்குநர் நெல்சனுடன் இணைந்து சங்கர் தாஸ், ரஞ்சித் ரவீந்திரன் திரைக்கதையை எழுத, எழுத்தாளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் வசனங்களை எழுதியுள்ளார். இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து விரைவில் வெளிவரப்போகிறது ஃபர்ஹானா.