cinema

img

‘லியோ’: நடனக் கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லையா?

நடிகர் விஜய் நடித்து, லோகேஷ்  கனகராஜ் இயக்கி வெளிவர வுள்ள ‘லியோ’ படத்தில் இடம்  பெற்றுள்ள பாடல் ஒன்றுக்கு நடன மாடிய நடனக் கலைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை சிலர் வைத்தனர். ஆனால், அதனைத் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம் மேளனம் (பெப்சி) மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி கீழ்க்கண்டவாறு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்:  “லியோ திரைப்படத்தில் உறுப்பி னர்கள் அல்லாத 1400 பேரைக் கொண்டு 6 நாட்கள் பாடல் காட்சிப்  படப்பிடிப்பு நடந்தது. இதில் பங்  கேற்ற உறுப்பினர் அல்லாதவர் களுக்கு என்ன ஊதியம் வழங்கலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்  தில் பேசியபோது ஊதியமும் பேட்டா வும் அத்துடன் போக்குவரத்துச் செலவு உட்பட நாளொன்றுக்கு ஒரு  உறுப்பினருக்கு 1,750 ரூபாய் வீதம்  6 நாட்களுக்கு 10,500 ரூபாய் வழங்கு வது என முடிவு செய்யப்பட்டது. இதன்அடிப்படையில் அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்  தப்பட்டது.  மட்டுமின்றி, தமிழ்நாடு திரைப் படம், தொலைக்காட்சி நடன கலை ஞர்கள் மற்றும் நடன இயக்குநர் கள் சங்கத்திற்கு (TANTTNNIS) இவர்களுக்கு ஒத்திகை அளித்த மைக்காக தனியாக பணம் வழங் கப்பட்டது. ஒரு சிலர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என  பேட்டியளித்தது தவறான செய்தியா கும்” - என அந்த அறிக்கையில் தெரி வித்துள்ளார். அடுத்த வாரம் இந்தப் படம் வெளி யாக உள்ள நிலையில் ‘லியோ’  படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்  ளதாகக் கூறப்பட்டு சர்ச்சைக்குள் ளான ஒரு வார்த்தையைப் படக்குழு ‘மியூட்’ செய்துள்ளது.