லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம் இன்று ரஷ்யாவில் வெளியாகியுள்ளது.
மாநகரம் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கைதி.
இந்தப் படம் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது.
இந்நிலையில், கைதி திரைப்படம் ரஷ்யாவில் 121 நகரங்களில், 297 திரைகளில் வெளியாகியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.