cinema

img

முதல்வர் பாராட்டிய நெஞ்சுக்கு நீதி...

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து, படக்குழுவினரை வாழ்த்திப் பாராட்டினார். ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் போனிகபூரும், ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுலும் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஆர்டிகிள் 15 என்ற பெயரில் இந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற படத்தின் தமிழ் வடிவம்தான் இந்த நெஞ்சுக்கு நீதி. உதயநிதியுடன் ஆரி அர்ஜுனா, தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் போன்றோரும் நடித்துள்ளார்கள். இன்று வெளியீடு காணுகிறது இந்தப்படம். 

;