cinema

img

ஜெ. வின் ஆதரவாளர்களை ஈர்க்க முயல்கிறாரா அஜித்? - சோழ. நாகராஜன்

எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்து, அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கிற “வலிமை” - படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பைச் சுமந்து வந்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிடப்பட்டு, துவக்கப்பட்ட படம் இது. 2019இல் அஜித் நடிப்பில் வெளிவந்த  நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு வினோத்தின் இயக்கத்தில் இந்த வலிமைக்கான அறிவிப்பு வந்தது. கொரோனா, ஊரடங்கு போன்ற காரணங்களால் பலமுறை தள்ளிப்போனது இதன் வெளியீடு.  தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டிருப்பதால் அஜித்தின் அரசியல் பிரவேசம் பற்றியும் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஜெ. வின் ஆதரவாளர்களை ஈர்க்கவே அவரது பிறந்தநாளை  அஜித் குழுவினர் தேர்வு செய்திருப்பதாகவும் பேச்சு. அம்மாவை (தன் தாயாரைத்தானுங்கோ) அஜித் புகழ்ந்து பாடுவதாகவும் படத்தில் காட்சி இருக்கிறதாம். வலிமை என்ற பெயரே ஜெயலலிதாவைத்தான் மறைமுகமாக நினைவுபடுத்துகிறதாம். படுத்துறீங்களேப்பா....