cinema

img

பத்தல என்ற நிலை வராமலிருந்தால் சரி - சோழ. நாகராஜன்

கமல் நடிப்பில் வரவிருக்கிறது இன்னொரு விக்ரம். கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இந்த விக்ரம் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் போன்றோரும் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசை. 2018 க்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து கமல் நடித்து ஒரு படம் வெளிவருகிறது. வரும் ஜூன் மாதம் 3 அன்று வெளிவரவிருக்கும் இந்தப் படத்தில் கமல் பாடியிருக்கும் பத்தல பத்தல பாடலை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். அது பலரும் கேட்க, வைரலாகி வருகிறது.  முன்பொரு காலத்தில் வெளிவந்த சுஜாதா எழுதிய விக்ரம் படத்திலும் கமல்தான் நடித்திருந்தார்.  அதே பெயரில் இப்போது இன்னொரு படம். அந்தக் காலத்து விக்ரம் படத்தில் அறிவியல் கற்பனை என்று சொல்லிக்கொண்டு ஏதேதோ அபத்தங்களை அரங்கேற்றியிருப்பார்கள். அதுபோல இல்லாமல் இதுவாவது புதிதாக ஏதாவது சொன்னால் பரவாயில்லை. இல்லையென்றால் ரசிகர்கள் இப்போதும் பத்தல பத்தல என்று சொல்லும் நிலை வந்துவிடும் அல்லவா? பார்ப்போம்!

;