cinema

img

நீளும் ஹிட் லிஸ்ட்...

தமிழ்த் திரையுலகில் வாய்ப்பு கள் குறைகிற, வாய்ப்புகள் இல்லாத இயக்குநர்கள் பலரும் நடிகர்களாக அவதாரம் எடுத்து, வலம்வரும் சூழல் நிலவுவதை நாம் அறிவோம். மணிவண்ணன், சுந்தரராஜன், அண்மையில் மறைந்த மனோபாலா என்று அதற்கொரு மிகநீண்ட பட்டியலே உண்டு.  அந்த வரிசையில் தற்போது இணைகிறார் இயக்குநர் கௌதம் மேனன். இயக்குநர் விக்ர மனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் கௌதம் மேனன் வில்ல னாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமாரின் உதவி இயக்கு நர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இந்தப் படத்தை இயக்குகிறார்கள். கே.எஸ்.ரவிக்கு மாரின் ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு ஹிட்லிஸ்ட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சரி தான், இயக்குநர்களை நடிகர் களாக்குகிற அந்த ‘ஹிட்’லிஸ்ட் தொடரத்தானே செய்கிறது?