cinema

img

அசலான வலியைச் சொல்லும் பொம்மை நாயகி...

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொட க்சன்ஸ் நிறுவனமும் யாழி ஃபிலிம்ஸும் இணைந்து உருவாக்கியுள்ள படம்தான் பொம்மை நாயகி. இதனை ஷான்  இயக்கியுள்ளார். யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருடன் சுபத்ரா, குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சுந்தரமூர்த்தி இசை யமைத்திருக்கிறார். பிப்ரவரி 3 அன்று வெளிவருகிற இந்தப் படத்தின் இசை வெளி யீட்டில் பேசிய யோகிபாபு இந்தப் படத்தின் கதை தந்தை - மகள் தொடர்பானது என்பதால் ஒரு அப்பாவின் அசலான வலி என்னவென்பதை இந்தப் படம் உணர்த்தும் என்றார்.  சினிமாவில் ஆரம்பகாலத்தில் எத்தனையோ அவமானங்களைத் தாண்டித்தான் இந்த இடத்திற்கு நான் வந்துள்ளேன். எப்போதுமே நான் ஒரு நகைச்சுவை நடிகன்தான். அதே நேரத்தில்  இந்த முகத்திலும் ஏதோ ஒன்று தெரிகிறதே என்று  நம்பி அழைத்தால் நாயகனாகக்கூட நடிக்கத் தயார் என்றார் இந்த பொம்மை நாயகியின் நாயகன் யோகிபாபு.

;