சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள கேப்டன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கேப்டன்.
இந்த படத்தில் ஆர்யா, சிம்ரன், ஐஷ்வர்ய லட்சுமி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகிய நிலையில், தற்போது இப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. கேப்டன் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.