cinema

img

நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று...

சென்னை 
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகரான  வடிவேலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு விஷயமாக இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்ற பொழுது பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. பரிசோதனை செய்தலும் முடிவு வர 4 நாட்கள் மேல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

;