கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை திரைக்கலைஞர்கள் சிவக்குமார்,சூர்யா குடும்பத்தினர் ஏப்ரல் 1 சனிக்கிழமையன்று பார்வையிட்டனர். நடிகர் சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி சிவக்குமார், நடிகர் சூர்யா, அவரது மனைவி நடிகை ஜோதிகா சூர்யா, குழந்தைகள் தேவ் ,தியா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் அங்குள்ள பதிவேட்டில் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உடனிருந்தார்.