cinema

img

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியை அடுத்து கமல்...

அட்டக்கத்தி, மெட்றாஸ் படங்களுக்குப்பின் கபாலி, காலா என்ற இரண்டு ரஜினியை வைத்து விளிம்புநிலை மக்களின் எளிய வாழ்க்கையின் முத்திரைச் செய்திகளைச் சொன்ன பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் அண்மையில் வெளியான சார்பட்டா பரம்பரை பெருவெற்றி பெற்றது. தயாரிப்பாளராகத் தடம் பதித்த பா.ரஞ்சித் தனது தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம்  உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய வித்தியாசமான படங்களைத் தந்தார். முற்றிலும் மாறுபட்ட தனது சினிமாக்களின் மூலம் தனக்கென்றொரு தனி இடத்தைப் பெற்றிருக்கும் ரஞ்சித் அடுத்து  கமல்ஹாசனை நாயகனாகக் கொண்ட ஒரு புதிய பட முயற்சியை மேற்கொள்ளவிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. ரஞ்சித் இயக்கத்தில் கமலை நடிக்கவைக்கிற முயற்சிக்கான பேச்சு வார்த்தையைக் கமல் தரப்பிலிருந்தே முதலில் மேற்கொண்டதாக வும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினிக்கு ஒரு கபாலிபோல கம லுக்கும் முற்றிலும் புதிய தடமாக பா.ரஞ்சித்தின் படம்அமையட்டும்.