cinema

img

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து.....

சென்னை:
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் மே 31 ஆம்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசுமுழு ஊரடங்கை அறிவித்துள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டுவந்துள்ளது. படப்பிடிப்புகளுக்கு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.ஃபெப்ஸி அமைப்பின்தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “சென்ற வாரம் முதலமைச்சரை சந்தித்தோம். சரியான வழிமுறைகள் வழங்க வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளோம். கொரோனா நிவாரண நிதிஉதவியாக கூடுதலாக திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூ.2ஆயிரம் வழங்க வேண்டும்,திரைப்பட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்ததனி முகாம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளோம். சினிமா தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவப் படுக்கை கிடைக்காமல் உயிரை இழக்கும் நிலை உள்ளது. படப்பிடிப்புக்கு அரசு அனுமதி தர வேண்டாம். இந்த மாதம் இறுதி வரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளோம்”என்று  தெரிவித்துள்ளார்.