cinema

img

எமர்ஜன்சி பட நிறுவனம் பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை,செப்.19- எமர்ஜன்சி படத்தின் சென்சார் விவகாரத்தில் படத்தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டூடியோ பாஜக மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.
  எமர்ஜன்சி படத்தில் பாஜக எம்.பி கங்கனா ரனாவத் சீக்கியர்களைத் தவறாக சித்தரித்திருந்தார். இது சீக்கியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. இப்படம் வெளிவந்தால் சீக்கியர் மத்தியில் பாஜகவிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். 
இதனால் ஹரியாணா தேர்தல் நேரத்தில் இப்படம் வெளிவராமல் இருப்பதற்கான வேலையை சென்சார் மூலம் அனுமதி வழங்காமல் பாஜக இழுத்தடிப்பதாக ஜீ ஸ்டூடியோ மும்பை உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது.