cinema

img

விவசாயிகள் பிரச்சனைக்கு மத்திய அரசே பொறுப்பு... கன்னட நடிகர் சிவராஜ்குமார் பேட்டி... .

பெங்களூரு:
விவசாயிகளின் கோரிக்கையை அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்; அவர்கள்தான் விவசாயிகளின் போராட்டத்திற்கு பொறுப்பு என்று கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

விவசாயிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் இதை செய்ய வேண்டும். உடனடியாக இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்தியாக வேண்டும். நமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு விவசாயிகளின் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும். விவசாயிகள் மற்றும் இந்த சட்டம் தொடர்பாக நிபுணத்துவம் பெற்றவர்கள் இதுபற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும். நடிகர்கள் ஆதரவு அளித்து விட்டால் விவசாயிகளின் பிரச்சனை தீர்ந்து விடும் என்று யாராவது எனக்கு உறுதி அளிக்க முன்வந்தால் நான் எழுத்துப்பூர்வமாக விவசாயிகளுக்கு ஆதரவளிக்க தயார். ஆனால் நடிகர்கள் மேடையேறி போராட்டம் நடத்தி விட்டால் ஒரு பிரச்சனை தீர்ந்து விடும் என்றால் நமது நாட்டில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. சினிமாத் துறையிலேயே தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இருக்கின்றன.இவ்வாறு சிவராஜ்குமார் கூறியுள்ளார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டாரானராஜ்குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.