cinema

img

ரூ.1,000 கோடி வசூலை நோக்கி ’ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் : தென்னிந்திய அளவில் புதிய சாதனை...

சென்னை 
"பாகுபலி" இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகியது. பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில்  உருவான இந்த ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றாலும், வணிக ரீதியில் பட்டையை கிளப்பியுள்ளது.

ரிலீசான முதல் நாளே ரூ.223 கோடி வசூலித்தாக படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது உலக அளவில் ரூ.1,000 கோடி வசூலை நெருங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இந்திய சினிமாவில் அதிகபட்ச முதல் நாள் வசூலில் முதலிடத்தையும் ரூ.1,000 கோடியை நெருங்கும் முதல் தென்னிந்தியத் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்று அசதியுள்ளது ஆர்ஆர்ஆர் திரைப்படம்.