“ரூ. 100 கொடுத்தால் மூதாட்டி பில்கிஸ் பனோ எந்தப் போராட்டத்திலும் பங்கேற்பார்” என திமிராகப் பதிவிட்டதுடன், பில்கிஸ் பனோவுக்குப் பதில் வேறொரு மூதாட்டியின் படத்தை டுவிட்டரில் பதிவேற்றிய பாஜக ஆதரவு நடிகை கங்கனா ரணாவத்திற்கு தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை கமிட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.