சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ், எம்.எஸ்.பாஸ்கர் போன்றோர் நடிப்பில் வெளிவந்து பலரின் பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்ற ஜெய்பீம் படத்திற்கு அண்மையில் நடந்த தாதா சாகேப் பால்கே சர்வதேசத் திரைப்பட விழாவில் மேலும் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த படம் என்கிற விருதும், ராஜாகண்ணு பாத்திரத்தில் நடித்ததற்காக மணிகண்டனுக்குச் சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.