தூய்மைப் பணியாளர்களின் வாழ்க் கையை மையமாகக் கொண்டு உரு வாகி இருக்கும் ‘‘விட்னஸ்’’ திரைப் படம் டிசம்பர் 9 அன்று சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. பெருநகரங்கள் குறித்து நாம் இது வரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங் களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் இப்படத்தை, அறி முக இயக்குநர் தீபக் இயக்கி இருக்கி றார். அவரே ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார். தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத் துறைகளில் மாபெரும் வெற்றிப்படங் களைத் தயாரித்து வெளியிட்ட ‘தி பீப் பிள் மீடியா பேக்டரி’ ஓர் அழுத்தமான, அதே சமயம் உணர்வுப்பூர்வமான திரைப் படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுல கில் காலடி எடுத்து வைக்கிறது. ‘‘தி பீப்பிள் மீடியா பேக்டரி’’ சார் பாக டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரிக்க, விவேக் குச்சிபோட்லா இணைந்து தயா ரித்துள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகிணி ஆகி யோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்க, அழகம்பெருமாள், சண்முக ராஜா, ஜி.செல்வா, சுபத்ரா ராபர்ட், ராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.இராம் ஆகியோர் முக்கியமான பாத்திரங்க ளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். பிலோமின் ராஜ் எடிட்டராகவும், ரமேஷ் தமிழ்மணி இசை யமைப்பாளராகவும் பணியாற்றியுள்ள னர். பாடலாசிரியர் கபிலன் பாடல்களை எழுதியிருக்கிறார். இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகுந்த வர வேற்பை பெற்றுள்ள நிலையில், வரு கிற டிசம்பர் 9 அன்று சோனி ஓடிடி தளத் தில் நேரடியாக வெளியாகிறது.மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.