cinema

img

100 ஆண்டுகளில் மிகச் சிறந்த படம்?

கடைசி விவசாயி - இது காக்கா முட்டை மணிகண்டன் தயாரித்து, இயக்கியுள்ள படம். நல்லாண்டி என்னும் முதியவர் நம்ம ஊர் விவசாயியாக இந்தப் படத்தில் வாழ்ந்திருக்கிறார். அவருடன் விஜய் சேதுபதி, யோகிபாபு போன்றோரும் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படம்  கடந்த பிப்ரவரி 12 அன்று திரையரங்குகளுக்கு வந்து நல்ல வரவேற்போடு ஓடிக்கொண்டிருக்கிறது. அரசியல் இயக்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பெரிதும் பாராட்டியுள்ள இந்தப் படத்தைக் கடந்த 100 ஆண்டுகளின் மிகச் சிறந்த படம் என்கிறார் பிரபல இயக்குநர் மிஷ்கின். இது கொஞ்சம் மிகையான பாராட்டு என்றும் கருத்துக்கள் வந்தாலும் கடைசி விவசாயி போன்ற படங்கள் தமிழ் சினிமாவைத் தரமுயர்த்தும் முயற்சிதான் என்பதில் ஐயமில்லை. மிஷ்கின் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் காணொலியில் மேலும் கூறியிருப்பது இது: நாம் அனைவரும் குடும்பத்துடன் இந்தப் படத்தைப் போய்ப் பார்க்கவேண்டும். பார்க்க வேண்டிய முக்கியமான படமென்று நம் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். இப்படத்தில் பணிபுரிந்த நடிகர்கள்,  தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரின் கால்களையும் நான் முத்தமிடுறேன்.