பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம்தான் மாமன்னன். அண்மையில் இந்தப் படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. இதன் முன்னோட்டம் - டிரைலர் ஜுன் 16 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29 அன்று படம் வெளிவர இருக்கிறது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்கள். முக்கிய வேடத்தில் நடித்துள்ள வடிவேலு இந்தப் படத்தில் பாடியுள்ள பாடல் இப்போதே பெரிய ஹிட் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதன் இசை ஏ.ஆர்.ரஹ்மான்.