cinema

img

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்.... கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு

சென்னை:
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் சந்தேகங்கள் வளர்ந்துள்ளதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக் காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக (விஜே) அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார்.சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் சித்ரா. எம்எஸ்சி பட்டதாரியான இவர், விஜய் தொலைக்காட்சி படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி தனியார் பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வரு
கிறது.  இதில் பங்கேற்பதற்காக அதன் அருகில் பிரபல ஓட்டலில் சித்ரா தங்கியிருந்தார்.

இந்த நிலையில், நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஓட்டலில் புதன்கிழமை டிசம் பர் 9ஆம் தேதி  அதிகாலை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று செய்திகள் வெளியானது.சென்னை பூந்தமல்லி அருகே உள்ள கரையான்சாவடி பகுதியை சேர்ந்த ஹேம்நாத் என்பவரோடு நான்கு மாதங்கள் முன்பு திருமண நிச்சயம் முடிந்தது. வருகிற ஜனவரிமாதம் திருமணம் நடைபெற இருந்தது.இந்த நிலையில் தான் அவர் தற்கொலைசெய்து கொண்டதாக கூறப்பட்டது.ஹோட்டல் அறையில் குளிக்கச் சென்ற சித்ரா நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் ஓட்டல் ஊழியர்கள் கதவை திறந்து பார்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மின் விசிறியில் நைட்டி அணிந்த நிலையில், பிணமாக இருந்த சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சித்ரா இறந்த தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோர், உறவினர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் ரத்த காயம் உள்ளது. வலது பக்க கன்னத்திலும், நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளன. அதே சமயம் கழுத்தில் தூக்கு போட்டதற்கான எந்த ஒரு அடையளமும் இல்லை. இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்று அவரது ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர்.மேலும் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும் அதற்கான ஆதாரங்களை சித்ராவின் கணவர் காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து கோட் டாட்சியர் விசாரணைக்கும் உடனடியாக உத்தரவிடப்பட்டது.சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திரைத்துறையில் பேரும் புகழும் பெற்ற சித்ரா, மிகவும் தைரியசாலி, மனவலிமை கொண்டவர் என அவருடன் பயணித்த திரைத்துறையினர் மட்டுமின்றி பெற்றோரும் உறுதிப்படுத்தினர்.இந்நிலையில், மறைந்த சித்ராவின் தந்தை காமராஜ் மற்றும் உறவினர்கள் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சித்ராவின் மரணத்திற்கு யார் காரணம் என் பதை கண்டுபிடிக்க தந்தை மற்றும் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

;