cinema

img

‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள் மறைவு... - சோழ. நாகராஜன்

தனியார் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுப் புகழ்பெற்றவர் ரமணியம்மாள். அப்போது அவரை எல்லோரும் ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள் என்றே அழைத்தார்கள். அதுவே அவரது பெயரானது. அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது பரிசைப் பெற்ற அவர் 2004இல் வெளிவந்த காதல் திரைப்படத்தில் இடம்பெற்ற தண்டட்டிக் கருப்பாயி என்ற பாடலைப் பாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து காத்தவராயன், தெனாவட்டு, ஹரிதாஸ், ஜூங்கா, சண்டக்கோழி 2, காப்பான், பொம்மை நாயகி போன்ற படங்களில் பாடியுள்ளார்.  நாட்டுப்புறப் பாடல்கள் பலவற்றையும் பாடியுள்ள ரமணியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 63. அவரது மறைவுக்குத் திரைத்துறையினரும், இசைக் கலைஞர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.