அதர்வா - தி ஆரிஜின் என்பது புதிதாக வெளிவரவிருக்கிற கிராஃபிக்ஸ் நாவல். பிரபல கிரிக்கட் வீரர் எம்.எஸ்.தோனியை நாயகனாக வைத்து இந்த நாவல் உருவாக்கப்படுகிறது. ரமேஷ் தமிழ்மணி எழுதியுள்ள இந்த நாவலில் தன்னையும் இணைத்ததற்காக மிகவும் மகிழ்வதாக தோனி கூறியுள்ளார். எல்லோரையும் ஈர்க்கும் கதையும் அதிஅற்புதக் கலைத்தன்மையும் கொண்ட வசீகரிக்கும் கிராஃபிக் நாவல் இது என்றும் அவர் பெருமையோடு கூறினார். இதன் வெற்றியைத் தொடர்ந்து இது திரைப்படமாகவும் உருவாகலாம் என்று தெரிகிறது.