திங்கள், மார்ச் 1, 2021

cinema

img

கமல்ஹாசன் நலமாக உள்ளார்: மகள்கள் அறிக்கை...

சென்னை:
அப்பாவிற்கு காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது, நலமாக இருக்கிறார் என கமல் ஹாசன் மகள்கள் தெரிவித்துள்ளனர்.எலும்பியல் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள கமல் ஹாசனின் உடல் நிலை குறித்து அவரது மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகியோர் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.அதில், “ஜனவரி 19 ஆம் தேதி காலையில் ஸ்ரீராம்சந்திரா மருத்துவமனையில், மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி ஒருங்கிணைப்பில், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன்குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக இருக்கிறார்.

அப்பாவை மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும், மருத்துவமனை நிர்வாகமும் நல்லமுறையில் பார்த்துக்கொள் கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார். மகிழ்விப்பார்.அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனக் குறிப் பிட்டுள்ளனர்.

;