கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளிவந்து ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற படம்தான் புத்தம்புதுக் காலை. ஐந்து இயக்குநர்களின் ஐந்து குறுங்கதைப் படங்களடங்கிய ஆந்தாலஜி எனும் கதைகளின் தொகுப்பான இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தினை புத்தம்புதுக் காலை விடியாதா என்னும் பெயரில் 2022ல் வெளியிட இருக்கிறார்கள். ஐந்து கதைகளின் தொகுப்பான இந்தப் படத்தை வரும் பொங்கல் தினத்தன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.