cinema

img

பிரதமர் மோடி பொறியியல் கட்டமைப்பை ஏற்படுத்தும் வரை டீ, பகோடா விற்று வாழவா?

இந்தியாவின் முதல் கட்டட பொறியாளராக  போற்றப்படுபவர் சர். மோட்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா ஆவார். கர்நாடக மாநிலம் முட்டனஹள்ளி கிராமத்தில் 1860 செப்டம்பர் 15 அன்று பிறந்த  விஸ்வேஸ்வரய்யா, பொறியியல் துறையில் சிறந்து விளங்கியவர். சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று கட்டுமானத் தொழில்நுட்பங்களை அறிந்த அவர், அதனை இந்தியாவில் செயல்படுத்தியவர். அணையில் உள்ள நீர்மட்ட அளவை தொடர்ந்து கண்காணித்து நீர் மட்டம் உயரும்போது வெள்ள அபாய எச்சரிக்கையை கொடுக்கும் ‘பிளாக் சிஸ்டம்’ என்கிற கண்டுபிடிப்பை 1903-இல்  உருவாக்கிய அவர்,  தக்காணப் பீடபூமியில் தனித்துவமான பாசன திட்டமுறையையும், விசாகப்பட்டினம் துறைமுகத்தை கடல் அரிப்பிலிருந்து காக்கும் கட்டுமான வடிவமைப்பையும், ஹைதராபாத் நகரை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் புதிய கட்டமைப்பையும் ஏற்படுத்தித் தந்தவர். கிருஷ்ணராஜ சாகர் அணையின் தலைமைப் பொறியாளராகவும் செயல்பட்டவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாள்தான் (செப்டம்பர் 15) ஆண்டுதோறும் தேசிய பொறியியல் தினமாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுதில்லி, செப். 15 - பிரதமர் நரேந்திர மோடி பொறி யாளர் தினத்துக்கு வாழ்த்து தெரி வித்த நிலையில், மோடியின் வாழ்த்தை திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் கிண்டலடித்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 - தேசிய பொறியிய லாளர் தினமான கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு செப்டம்பர் 15-இல் பொறியாளர் தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். “தேசிய பொறியியலாளர் தினத்தில் சர். எம். விஸ்வேஸ்வரய்யா வின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூறுகிறேன். அவர் நாட்டின் பொறி யாளர்களை ஊக்கப்படுத்தி வரு கிறார். இதுதொடர்பாக முந்தைய மங்கிபாத் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறேன்.

பொறியாளர் தினத்தில் அனைத்து பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள். நாட்டை கட்டி யெழுப்புவதில் திறமையான பொறி யாளர்களை கொண்டிருப்பதன் மூலம் நம் நாடு ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது. மேலும் பொறியியல் கல்லூரிகளை உருவாக்குவது உள்பட பொறியியல் படிப்பிற்கான உள்கட்ட மைப்பை மேம்படுத்த ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது’’ என வாழ்த்து செய்தியில் மோடி கூறியிருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியின் பொறியியலாளர் தின வாழ்த்தில், “பொறியியல் கல்லூரிகளை உருவாக்குவது உள்பட பொறியியல் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ள வரிகளை குறிப்பிட்டு, திரைக்கலைஞர் பிரகாஷ்  ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “அவர்கள் பொறியியல் துறை சார்ந்த உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வரை பக்கோடா, டீ விற்று வாழலாம்” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.