திரைக்கலைஞர் நாசரின் தந்தை மொகபூப் பாட்ஷாஉடல் நலக்குறைவு காரணமாக செவ்வா யன்று செங்கல்பட்டில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 95. அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திரைத்துறை யினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாசர் சினிமா உலகில் நுழைய காரணமாக இருந்த வர்களில் முக்கியமானவர் அவரது தந்தை மொகபூப் பாட்ஷா. தனது மகனின் அதீத நடிப்புத் திறனைக் கண்ட றிந்து அவரை ஊக்குவித்தார். தந்தையின் விருப்பத்துக்கா கவே நடிப்புப் பயிற்சிக் கல் லூரியில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டார் நாசர். வாய்ப்புகள் வராதசூழலில் ஓட்டல் பணிக்குச் சென்றார் நாசர். அதனால் மனம் வருந் திய அவரது தந்தை நாசர் திரையுலகில் நுழையக் காரணமாக இருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலில், “மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரு மான நாசரின் தந்தை மறைவெய்தினார் என்ற றிந்து வருந்துகிறேன். அவர் மறைவால் வாடும் நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
வில்லன் இல்லா திரைப்படம்
‘இனி ஒரு காதல் செய்வோம்’ படம் பற்றி இயக்குநர் ஹரிஹரன் “இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லை. வில்லன் கதாபாத்திரமும் இல்லை. சூழ்நிலைகள் எவ்வாறு மக்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் சித்தரிக்கின்றன. அதன் அடிப்படையில் ஒருவரைப் பற்றிய மற்றொருவரின் கருத்து எவ்வாறு மாறுகிறது என்பதை சுவாரஸ்யமான முறையில் இந்தப் படம் சொல்லும். நகைச்சுவை ததும்பும் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது” என்றார்.