cinema

img

ஹாட் ஸ்டார் - ஜீ இடையே புதிய ஒப்பந்தம்?

இந்திய ஆடவர் அணி இந்திய நாட்டில் மற்றும் குறிப்பிட்ட ஒரு கண்ட பகுதியில் விளையாடும் ஆட்டங்களை ஸ்டார் நிறுவனம் ஒளி பரப்பு செய்து வருகிறது. ஸ்டார் நிறுவனத்தின் ஓடிடி பிரிவான ஹாட் ஸ்டார் டிஸ்னியும் தனது சந்தா தாரர்களுக்கு கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்து வருகிறது.  இந்நிலையில், ஓடிடி பிரிவில் மட்டும் ஹாட் ஸ்டாருடன் ஜீ (zee) என்டர்டெயின்மென்ட் இணைய வுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவ்வாறு புதிய கூட்டணி உருவாகும் பட்சத்தில் ஹாட் ஸ்டார் ஒளிபரப்பும் இந்திய ஆடவர் அணி ஆட்டங் களை ஜீ சந்தாதாரர்கள் கண்டுகளிக்கும் வசதி உரு வாகலாம். ஆனால் இதுபற்றி செய்தி அறிவிப்பு மட்டு மே வெளியாகியுள்ளது. முறையாக எந்த அறிக்கை அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.