புதுதில்லி:
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வுக்கு ஏற் பவே, இந்தியாவிலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் - டீசல் விலையை நிர்ணயித்து வருவதாக மோடி அரசு கூறினாலும், அதில் உண்மை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.கொரோனா பொதுமுடக்கத் தின்போது, சர்வதேச சந்தையில்கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்தில் விழுந்தபோதும், இந் தியாவில் விலை குறையவில்லை. மாறாக, உயர்த்தப்பட்டது. தேர்தல் காலங்களில் மட்டும் தான் யாரும் கோரிக்கை விடுக்காமலேயே பெட்ரோல் விலையை மோடிஅரசு உயர்த்தாது. தற்போதும்கூட 5 மாநிலத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னணியில், கடந்த 12 நாட்களாக பெட்ரோல் - டீசல் விலையானது, ஏற்றமோ - இறக்கமோ இல்லாமல் உள்ளது.
இவ்வளவுக்கும் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை65 டாலரைத் தாண்டி, 69.36 டாலருக்கு வந்துள்ளது.இது ஒருபுறமிருக்க, கடந்த ஓராண்டில் மட்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 21 ரூபாய் வரை மோடி அரசு உயர்த்தி இருப்பது தெரியவந்துள்ளது.தில்லியில், கடந்த 2020 ஜூலை மாதத்தின் கடைசியில், பெட்ரோல் விலை லிட்டர் 80 ரூபாய் 43 காசுகளாகவும், டீசல் 81 ரூபாய் 94 காசுகளாகவும் இருந்தது. தற்போது 2020மார்ச்சில் தில்லியில் பெட்ரோல் விலை 91 ரூபாய் 17 காசுகளாக அதிகரித்துள்ளது. இதுவே மும்பையில் 97 ரூபாய் 57 காசுகளாகவும், சென்னையில் 93 ரூபாய் 11 காசுகளாகவும், கொல்கத்தாவில் 91 ரூபாய் 35 காசுகளாகவும் உயர்ந்துள்ளது.ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 100-ஐ தாண்டியது. ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் பெட்ரோல் விலை 101 ரூபாய் 84 காசுகளாகவும், மத்தியப் பிரதேசத்தின் அனுப்பூரில் பெட்ரோல் லிட்டருக்கு 101 ரூபாய் 59 காசுகளாகவும் உள்ளது.
இதனிடையே பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர வாய்ப்பில்லை என்ற தகவலையும் மத்திய நிதியமைச்சகம் உறுதிப்படுத்தியுள் ளது. இவ்வாறு செய்வதற்கு ஜிஎஸ்டிகவுன்சிலின் பரிந்துரை கட்டாயம் தேவை எனவும், ஆனால், அது இன்னும் வரவில்லை என்றும் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதியமைச்சகம் பதிலளித் துள்ளது.